பென்னாகரம்: எரியூர் அருகே
அத்திமரத்தூர் கிராமத்தில் தொடர்ந்து 4 நாட்களாக மின்தடையால் பொதுமக்கள் சாலை மறியல்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொன்னகுட்ட அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அத்திமரத்தூர் கிராமத்தில் சுமார் 350 குடுபத்தினர் வசித்து வருகின்றனர்.இக் கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர் . இந்த நிலையில் அத்திமரத்தூர் கிராமத்தில் கடந்த 4- நாட்களாக மின்தடையால் இருளில் மூழ்கி உள்ளதாக கூறி இன்று மதியம் 2 மணி அளவில் கிராம மக்கள் அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.