காளையார்கோவில்: சூரக்குளத்தில் வீரத்தாய் குயிலி நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை,நினைவுத்தூணிற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சூரக்குளத்தில் வீரத்தாய் குயிலி நினைவேந்தல் தினத்தையொட்டி, அவரது திருவுருவச்சிலை மற்றும் நினைவுத்தூணிற்கு அமைச்சர்கள் பெரியகருப்பன், மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, முக்கிய பிரமுகர்கள் மற்றும் பலர் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.