குளித்தலை: சின்னரெட்டியபட்டி சாலையில் டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்ததில் 17 பேர் படுகாயம், தோகைமலை போலீசார் வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா ஆளிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார் (40). இவரின் உறவினர் இறப்பிற்கு டாட்டா ஏசி வாகனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தார். அப்போது சின்ன ரெட்டியப்பட்டி சாலையில் டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்ததில் பயணித்த 17 பேர் படுகாயம் அடைந்தனர். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.