ஏரல்: கோவங்காடு விளக்கு ரோட்டில் ஒருவருக்கு கத்திக்குத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய காயலில் இருந்து கோவங்காடு செல்லும் விளக்கு ரோட்டில் உள்ள எஸ் வளைவு அருகே வைத்து நேற்று மாலை சாயர்புரம் தெற்கு கோவங்காடுவைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் சேர்ந்து கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்தார். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.