சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாள் 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்தநாள் மற்றும் 63வது குருபூஜை விழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.பெரியமாடு, சின்னமாடு பிரிவுகளில் 26 வண்டிகள் பங்கேற்றன.பெரியமாடு 8 கிமீ மற்றும் சின்னமாடு 6 கிமீ தூர பந்தயத்தில் வெற்றி பெற்ற பெரியமாடு பிரிவில் முதல் ஐந்து ,சின்னமாடு பிரிவில் முதல் ஆறு மாட்டு உரிமையாளர்கள், சாரதிகளுக்கு கோப்பை, ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.