காரைக்குடி: காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் கொடியை அர்ச்சித்து ஏற்றினார்
காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கொடியை அர்ச்சித்து ஏற்றினார். செஞ்சை பங்குத்தந்தை கிளமெண்ட் ராசா முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்கு இறைமக்கள் ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர். அடுத்த 10 நாட்களுக்கு நவநாள் திருப்பலி, (அக்-11) சனிக்கிழமை திருவிழா திருப்பலியும் தேர் பவனியும் நடைபெறும்.