விராலிமலை: கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் தவறி விழுந்து உயிரிழப்பு - முருகன் ஆலயத்தில் சோகம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் மீது ஏறி நின்று கோவில் இடங்களை மீட்க வேண்டும் என போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் குடும்ப வாழ்வு ஆறுமுகம் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து பலி. உடலை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொடும்பாளூர் கிராமம் முழுவதும் சோகம்.