வண்டலூர்: முடிச்சூர் ஊராட்சி ரங்கநாதர் குளத்தை மறு சீரமைப்பு செய்ய ₹4 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை - MLA ராஜா பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சியில் உள்ள ரங்கநாதர் குளத்தை ஆழப்படுத்தி, நடைபாதை, உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்கா, மின்விளக்குகள் அமைப்பதற்காக ₹4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். விழாவில், முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.