திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரத்து குறைவாலும், முகூர்த்த நாள் என்பதாலும் மல்லிகைப்பூ விலை கிடு கிடு உயர்வு
தஞ்சை, சென்னை, ஈரோடு, சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து பனிப்பொழிவும் நிலவியது. இதன் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து காணப்பட்டது இதனால் பூ மார்க்கெட்டில் தற்போது மல்லிகை பூ 1 கிலோ ரூ.3000 முதல் ரூ.4000 வரையிலும் முல்லைப்பூ 1 கிலோ ரூ.1200, ஜாதிப்பூ ரூ.1000 அரளிப்பூ ரூ.200 என்று விற்பனையாகிறது தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தகவல்