குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 548 தங்க நகை பொட்டலங்களில் 261 பொட்டலங்கள் மாயமானது. மயமான பொட்டலங்கள் வேறு வங்கியில் அடகு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் வியாபாரிகளின் தினசரி சேமிப்பு தொகை வங்கியின் வைப்பு நிதி ரூ. 29 கோடி மாயமானது.