ஒட்டன்சத்திரம்: கள்ளிமந்தயம் அருகே தம்பதியினரை கட்டிப்போட்டு 15 பவுன் தங்க நகை கொள்ளை
ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் அருகே தும்பிச்சம்பட்டி பகுதியில் தோட்டத்து வீட்டில் கருப்பசாமி, ராஜேஸ்வரி தம்பதியினர் இருந்தபோது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி இருவரையும் கட்டி போட்டு 15 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்