ஊத்துக்குளி: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காவுத்தம்பாளையம் பகுதியில் 750 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்க 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடுக்கல் உள்ள நிலையில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் துணை மின் நிலையம் அமைக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்