வேடசந்தூர்: எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ₹3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம்
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். கரூர் எம்பி ஜோதிமணி முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிபாளையம் சாமிநாதன், வேடசந்தூர் வட்டாரத் தலைவர் சதீஷ், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அய்யலுகிருஷ்ணா, மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.