காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட,மாநகர,ஒன்றிய,நகர்,பேரூர், இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் எம் எல் ஏ க.சுந்தர் தலைமை தாங்கினார். திமுக இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் வரவேற்பு பேசினார்