நிலக்கோட்டை: சபரிமலையில் மண்டல மகர பூஜை காலங்களில் நெய் அபிஷேக நேரத்தை அதிகரிக்க வேண்டும் வத்தலக்குண்டு கலியுக வரதன் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கலியுக வரதன் ஐயப்பன் ஆலயத்தில் மண்டல கால பூஜைகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது இதில் பங்கேற்கும் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி சரண கோசத்துடன் ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். சபரிமலைக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த நெய் அபிஷேக நேரத்தை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.