நிலக்கோட்டை: அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டத்தில் அன்பு கரங்கள் திட்டம் குறித்த விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரூராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை சார்பில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு நலன் கூட்டம் நடைபெற்றது.