அருப்புக்கோட்டை: தேவாங்கர் கலை கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர்(ம)டிஎஸ்பி பங்கேற்பு
அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் 54 வது ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி மற்றும் டிஎஸ்பி காயத்ரி கலந்து கொண்டு பல்வேறு திறன்களில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர். மேலும் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.