ஸ்ரீவைகுண்டம்: தோழப்பன் பண்ணை பாசன கால்வாயை சூழ்ந்துள்ள அமலைச் செடிகள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது தோழப்பன் பண்ணை. மருதூர் அணையில் இருந்து பட்டர் குளத்திற்கு தண்ணீர் வரும் வழியில் அமைந்துள்ள தோழப்பன் பண்ணை பாசன கால்வாய் முழுவதும் அமலைச் செடிகள் சூழ்ந்துள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் வருவது தடைபட்டு இப்பகுதி விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே கால்வாயில் சூழ்ந்துள்ள அமலை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்