சாத்தான்குளம்: இரட்டைக்கிணறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு மழையால் சேரும் சகதியுமாக காணப்படும் சாலை
சாத்தான்குளம் அருகே உள்ள இரட்டை கிணறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியின் வாயில் முன்பாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் நடக்க சிரமம் அடைந்து வருகின்றனர். அதனால் சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனே சரிசெய்து தர வேண்டுமென கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.