விருதுநகர்: சத்திரரெட்டியபட்டி ஊராட்சி காவிரி நகரில் ஊராட்சி நிர்வாகம் ரோட்டரி கிங்டம் இணைந்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டது
விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி காவேரி நகரில் காந்திஜி பிறந்த நாள் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவில் ஊராட்சி நிர்வாகம் ரோட்டரி கிங்டம் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் காவேரி நகர் சாலை ஓர பகுதிகளில் வேம்பு புங்கை புலி நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்து வேலை அமைத்து தண்ணீர் ஊற்றினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மருது மற்றும் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.