காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நவம்பர் 14 குழந்தைகள் தினம், நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து சிறப்பு குழந்தைகள் நடை பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு பேரணியினை துவக்கி வைத்தார்.