சிங்கம்புனரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு அனுகிரங்கள் பெற நான்கு நாள் பாதயாத்திரையாக வந்த ஆவரங்குடி நகரத்தார்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு ஆவரங்குடி நகரத்தார்கள் மற்றும் இளையாத்தங்குடி கோவில் பெருமதூர் பங்காளிகள் 50-க்கும் மேற்பட்டோர் நான்கு நாள் பாதயாத்திரையாக வந்தனர். (அக்-2) ஆவரங்குடியில் இருந்து புறப்பட்டு, பணங்குடி, பாகனேரி, மதகுபட்டி, அரளிக்கோட்டை,ஏரியூர்,முத்துச்சாமிபட்டி வழியாக இன்று கோவிலை அடைந்தனர். மூன்றாவது ஆண்டாக முன்னோர்கள் பாரம்பரியப்படி யாத்திரை மேற்கொண்டு அருள் பெற்றனர்.கிராமத் தலைவர் இராம.அருணகிரி வரவேற்றார்.