பழனி: தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்தனர். மலைமீதுள்ள முருகன் கோயிலில் மாலையில் சாயரட்சை பூஜைக்கு பிறகு விநாயகர், சின்னகுமாரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.