ஆவடி: அத்திப்பட்டு அரசு பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பெண் கைது
திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு, அரசு பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு மாறு வேடத்தில் சென்று கஞ்சா சாக்லேட் பெற்ற போது அதை விற்பனை செய்த கீதா வ/40 பெண் இன்று மதியம் கைது செய்து அவரிடமிருந்து 516 கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்தனர்