வேடசந்தூர்: அய்யர்மடத்தில் நின்றிருந்த லாரியின் பின்பக்கமாக மோதி நொறுங்கிய எஸ்கார்ட் வாகனம்
சிவகாசியிலிருந்து மும்பையை நோக்கி பட்டாசு பண்டல்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றது. லாரி அய்யர் மடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் டீ சாப்பிட சென்று விட்டார். அப்பொழுது திண்டுக்கல் கரூர் ரோட்டில் காற்றாலை எஸ்கார்ட் வாகனம் டிரைவரின் அசதியால் கண்டெய்னர் லாரியின் பின்பக்கமாக மோதி உள்ளே நுழைந்தது. இதில் எஸ்கார்ட் வாகனத்தில் முன்பகுதி நொறுங்கியது.அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் இன்றி தப்பினார்.