வேடசந்தூர்: பாகநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை குடிநீர் கேட்டு முற்றுகை
வேடசந்தூர் ஒன்றியம் வடமதுரை தாலுகா பாகாநத்தம் ஊராட்சி புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்கவில்லை எனக்கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வளியாக சென்ற அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர்.