காரைக்குடி: முறையூரில் அன்னை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அசுவ வாகனத்தில் சென்று மகிஷாசூரனை வதம் செய்யும் விதமாக அம்பு எய்தல் விழா நடந்தது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே முறையூரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா செப்-23 முதல் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. தினமும் சுவாமிக்கு அன்னபூரணி, மஹிஷாசூர மர்த்தினி, துர்காபரமேஸ்வரி உள்ளிட்ட அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கப்பட்டது. விஜயதசமியன்று அன்னை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அசுவ வாகனத்தில் வலம் வந்து, சிவாச்சாரியார் மஹிஷாசூரனை வதம் செய்ய ஐந்து அம்புகள் எய்தார். பக்தர்கள் ஆர்வமுடன் அம்புகளை சேகரித்தனர்.