வேடசந்தூர்: சாலையூரில் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி நின்ற கார்
வேடசந்தூர் அருகே இடையகோட்டையில் இருந்து திண்டுக்கல் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. கார் சாலையூர் பகுதியில் சென்ற பொழுது வளைவில் திரும்பும் பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி நின்றது. இதில் காரில் வந்தவர்கள் காயம் இன்றி தப்பினர். இதனால் சாலையூர் நால்ரோடு தாடிக்கொம்பு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.