குஜிலியம்பாறை தாலுகா ஆர்.புதுக்கோட்டை பில்லம நாயக்கன்பட்டியை சேர்ந்த முத்தா நாயக்கர் மகன் தண்டபாணி என்ற திருநாவுக்கரசு வயது 48. மைக் செட் போடும் தொழிலாளியாக வேலை பார்த்தார். வடுகம்பாடி வேலாயுத கவுண்டனூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மின் ஒயர்களை கையாளும்போது மின்சாரம் தாக்கியது. படுகாயமடைந்த திருநாவுக்கரசு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். எரியோடு போலீசார் விசாரணை.