காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு வழிபாடு
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் விஷ்ணு பகவானாகிய பெருமாள் ஆமை உருவில் வந்து சிவபெருமானை வணங்கிய திருதலமாகவும் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் பரிகாரத் தலமாகவும், விளங்கி வருவது காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில். சிவபெருமானுக்கு உகந்த மாதமாகிய கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் கடை ஞாயிறு வழிபாடு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்