நிலக்கோட்டை: வத்தலகுண்டு அருகே, 100 நாள் வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்கள் மீது ஆட்டோ மோதி பெண் பலி ஆட்டோ ஓட்டுநரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
பழைய வத்தலகுண்டுவைச் சேர்ந்த கிராமப் பெண்கள் 100 நாள் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது, வேகமாக வந்த ஆட்டோ மோதியதில், ரத்தினம் என்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் 2பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்யக்கோரி, உயிரிழந்த ரத்தினத்தின் உறவினர்கள் வத்தலகுண்டு காவல் நிலையம் எதிரே பெரியகுளம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது