திருவள்ளூர்: பெரியகுப்பத்தில் வீட்டில் 11 சவரன் நகை திருடிய 2 பெண்கள் கைது
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரி (52). கணவரை இழந்த இவர் சொந்த வீட்டில் ஒரு பகுதியில் வசித்து வரும் மகேஷ்வரி வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த சரிதா, ஜமுனா ஆகியோர் வாடகைக்கு அருகில் உள்ள மற்றொரு அறையை வாடைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது மகேஸ்வரி வீட்டில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகையை திருடி சென்றுள்ளன இது தொடர்பாக அவர் இருவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்