சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் விவசாயம் செழிக்க புரவி எடுப்பு விழா: வழி எங்கும் நெருப்பு துகள்கள் பரவி கிடக்க அதன் மேல் புரவிப் புறப்பாடு நடக்கும் அதிசய நிகழ்வு
சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் விவசாயம் செழிக்க புரவி எடுப்பு விழா கோலாகலமாக நடந்தது.வைகாசி,புரட்டாசி மாதங்களில் நடக்கும் இவ்விழாவில்,கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.7 அடி மண் குதிரை தயாரிக்கப்பட்டு,வேளார் தெருவில் இருந்து மண் புரவியும்,சேவுகப்பெருமாள் கோவிலில் இருந்து வெங்கல புரவிகளுடன் ஊர்வலம் நடந்தது.பயிர்கள் செழிக்கவும்,மழை பெய்யவும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. கிராமத்தார்கள்,நாட்டார்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.