திருப்பத்தூர்: ஆலம்பட்டியில் நடைபெற்ற அதிமுக பூத் கிளைகழக நிர்வாகிகள் பயிற்சி முகாமி்ல் நாதகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இரு இளைஞர்களுக்கு வரவேற்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆலம்பட்டியில் அதிமுக பூத் கிளை நிர்வாகிகள் பயிற்சி முகாமில், நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிய இரு இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். மண்டல ஐடி விங் தலைவர் கோபி வரவேற்றார். சினிமா மோகத்தில் உள்ள இளைஞர்களை அரசியலுக்கு அழைக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்வதாக பேசினார். அனைத்து விதமான பதவிகளிலும் அதிமுக வேட்டி கட்டிய ஒருவரே இருக்க வேண்டும் என உறுதி ஏற்க வலியுறுத்தினா்.இதில் பலர் கலந்துகொண்டனர்