கடவூர் தாலுகா மேல சக்கரக்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் வயது 36. கரூரில் உள்ள டெக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பொது இடத்தில் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்துள்ளார். இது குறித்து போலீசார் கூறியும் கேட்காததால் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் கார்த்திக் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.