குளித்தலை: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சமரச மைய நாள் விழா விழிப்புணர்வு பேரணி
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச மைய நாள் விழா விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மாவட்ட சமரச மையம் தீர்வு நீதிபதி பாக்கியம் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். தோகைமலை தனியார் மகளிர் கல்லூரி மற்றும் முசிறி அரசு கல்லூரி மாணவ மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி சமரச நீதிமன்றத்தில் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.