காட்டுமன்னார்கோயில்: என்.டி.ஏ கூட்டணியில் இருந்து அமமுக விலகியதாக காட்டுமன்னார்கோவிலில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியதாக காட்டுமன்னார்கோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைவோம் என்று இவ்வளவு நாளாக காத்திருந்து விட்டோம், துரோகம் தலைவிரித்து ஆடுவதால் பொறுத்தது போதும் என்று 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கள் வழியில் சந்திக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.