திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ”அறிவியல் திருவிழா 2026” தொடர்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாநில அளவிலான ‘அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.