திருத்தணி: SIR பணியில் ஈடுபடும்
அங்கன்வாடி பணியாளர்களை திட்டிய குழந்தை வளர்ச்சி அலுவலரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அங்கன்வாடி பணியாளர்கள் தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,மேலும் அங்கன்வாடி பணியாளர்களை தேர்தல் பணிக்கு சென்றால் உங்கள் சம்பளம் பிடிக்கப்படும் என்று அங்க நாடி பணியாளர்களுக்கு இரண்டு நாள் சம்பளத்தை பிடித்ததும் நாய் பேய் என்று தகாத வார்த்தையில் அவதூறாகவும் மிரட்டியதாகவும் அங்கன்வாடி பணியாளர்கள் குற்றச்சாட்டி திருத்தணி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி கண்டித்து ஆர்ப்பாட்டம்