கயத்தாறு: ஆத்திகுளம் கிராமத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை கயத்தாறு போலீசார் விசாரணை
கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தைச் சார்ந்த 18 வயது இளம்பெண் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, எதற்காக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.