வேடசந்தூர்: காசிபாளையத்தில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
வேடசந்தூர் ஒன்றியம் கல்வார்பட்டி ஊராட்சி காசி பாளையம் சி பி ஆர் நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் தூண்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் தண்ணீருடன் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.