அருப்புக்கோட்டை: பெரியநாயகபுரம் விலக்கு அருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பள்ளிக்கு சொந்தமான காரில் அருப்புக்கோட்டை சென்றுள்ளனர். பின்பு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தபோது மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, பெரியநாயகபுரம் விலக்கு அருகே அந்த கார் நெருங்கியபோது, திடீரென காரின் முன்பகுதியில் தீப்பிடித்து புகை வெளியேறியது. உடனே காரில் வந்தவர்கள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். சிறிதுநேரத்தில் கார் மள, மளவென எரிய தொடங்கியது. இந்த சம்பவத்தில் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.