அரியலூர்: வல்லக்குளத்தில் மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து- ₹15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
அரியலூர் மாவட்டம் வல்லக்குளம் கிராமத்தில் சசிகுமார் என்பவர் கடந்த 06 ஆண்டுகளாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். மேலும் வருகிற 03 நாட்களுக்குள் கோழிக்குஞ்சு விடுவதற்காக பண்ணையை தயார் செய்துள்ளார். இந்நிலையில் இவரது கோழிப் பண்ணையில் ஒரு செட்டில் நேற்று இரவு தீ பிடித்துள்ளது. இதில் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.