சிங்கம்புனரி: திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் புதிய மாணவ மாணவிகளுக்கு நெல்மணியில் வித்யாரம்பம் நிகழ்ச்சியை பெற்றோர்கள் துவக்கி வைத்தனர்
திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.அதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி சரஸ்வதி வேடமிட்டு பள்ளிக்கு வந்தார். அங்கு நடைபெற்ற விஜயதசமி நிகழ்வில் பங்கேற்று புதிதாக பள்ளியில் சேர வந்த மாணவ மாணவிகளுக்கு நெல்மணியில் உகாரம் அகாரம் எழுதி குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சியை பெற்றோர்கள் துவங்கி வைத்தனர்.இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்