திருச்செந்தூர்: முகைதீன் பள்ளிவாசல் அருகே மழை நீரில் மீன்கள் நடமாடியதால் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்
காயல்பட்டினம் பகுதியில் உள்ள முகைதீன் பள்ளிவாசல் பின்புறம் உள்ள சாலையில் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக அப்பகுதி குளம் போல காட்சி அளிக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் தேங்கிய மழை நீரில் மீன்கள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.