வேடசந்தூர்: தாமரைபாடியில் தீராத வயிற்று வலியால் பெண் தூக்கு மாட்டி தற்கொலை
வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி பகவதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த மணிமேகலை வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மணிமேகலை உயிரிழந்தார்.