குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே வீணாக செல்லும் காவிரி தண்ணீர்
கரூர் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் குடிநீர் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சென்று கொண்டுள்ளது. தண்ணீர் குழாய் பராமரிப்பு மற்றும் நீர் கொண்டு செல்லும் பணிக்கான ஒப்பந்ததாரர் இது குறித்து கண்டு கொள்வதில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்...