குளித்தலை: ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 270 வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி
குளித்தலை தொகுதியில் 270 வாக்குச்சாவடி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி, வட்டாட்சியர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.