சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள இ.பி.எஸ் வருகை புரிந்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கிய சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.