கயத்தாறு: சுப்பிரமணியபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் மழையில் நனைந்த ஆதரவற்ற மூதாட்டி மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுப்பிரமணியபுரம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் மழையில் மூதாட்டி நனைந்து கிடப்பதாக அப்பகுதி கவுன்சிலர் கோகிலாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கோகிலா 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மூதாட்டியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி தூத்துக்குடியைச் சார்ந்த அகமது மொய்தீன் மனைவி ஜெர்மிளா என்பது தெரியவந்தது.